1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer

எங்களைப்பற்றி

அதிரை பைத்துல்மால்

கல்லாமை, இல்லாமை, வறுமை, வட்டிக்கொடுமை ஒழிப்பமைப்பு!

"எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே"

கடந்த 1432 வருடங்களுக்கு முன்பு ரசூலே கரீம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி அமைப்பு தான் "பைத்துல்மால்". "பைத்" என்ற அரபிச் சொல்லுக்கு "வீடு" என்றும். "மால்" என்ற சொல்லுக்கு பொருள் என்ற அர்த்தத்துடன் பொருள் நிறைந்த வீடு என்றோ அல்லது "பொருளகம்" என்றோ அர்த்தம் கொள்ளலாம். ஏழைகளுக்காக செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை வறியவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதுதான் பைத்துல்மாலின் பணி. பகுத்தறிவும், நாகரீகமும் முன்னேறியுள்ள இக்காலத்தில் கூட எந்த ஒரு அரசும் சிந்தித்துப் பார்க்காத ஒரு புரட்சியை 1432 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் செயல்படுத்தியது. மக்களின் வரிப்பணம் "ஏழைகளின் பணம்", தேவையுடையோரின் பணம் என்கின்ற கொள்கை முழக்கத்தோடு பணியாற்றுவதுதான் பைத்துல்மாலின் தனிச்சிறப்பாகும். இதன் அடிப்படையிலேயே கல்லாமை, இல்லாமை, வறுமை, வட்டிக்கொடுமை போன்ற துன்பங்களைத் துடைத்தெறிய ஏற்படுத்தப்பட்டது தான் "அதிரை பைத்துல்மால்". கடந்த 1993ம் ஆண்டில் நல்லுள்ளம் கொண்டோரின் முயற்சியால், வட்டியின் கொடுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில் உருவாக்கப்பட்டதுதான் அதிரை பைத்துல்மால்.

தொடக்கம் முதல் இன்று வரை இதன் வளர்ச்சியிலும், செயல்பாடுகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டிவரும் வெளிநாடு வாழ் சகோதரர்களில் தமாம், ரியாத் ABM கிளை, அய்டா- ஜித்தா, துபாய் மற்றும் குவைத் ABM கிளையினரையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ரமலான் மாதத்தில் நடைபெறும் ஏழை எளியோருக்கான ஃபித்ரா அரிசி விநியோகத்திட்டமானது இக்கிளையினரின் ஈடுபாட்டாலும், நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியா வாழும் நமது சகோதரர்களின் பெரும் ஆதரவாலும் வெற்றிகரமாக நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

அதிரை பைத்துல்மால் நிர்வாகம்; வட்டியில்லா நகைக்கடன், ஆதரவற்ற விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கல், துயர்துடைப்புப்பணிகள், ஏழைக்குமர்களுக்கு இலவசத்திருமணம் போன்ற பல அரிய பெரிய திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் தற்போது கல்வி விழிப்புணர்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டு "அனைவர்க்கும் உயர் கல்வி" என்ற செயல் திட்டத்தோடு களமிறங்கி ஏழை, எளியோரும் உயர் கல்வி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் வரும் 2013-2014 கல்வி ஆண்டு முதல் ஏழை மாணவ மாணவிகளை தத்தெடுத்து உயர் கல்வி வழங்கி, அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த முடிவெடுத்து செயல்படுத்த இருக்கின்றது, இதற்கு தங்களின் ஆலோசனைகளோடு ஆதரவும் தந்து உதவினால் இன்ஷா அல்லாஹ் இதை வெற்றிகரமாக செயல்படுத்தலாம். மாணவ / மாணவிகளை ஒன்று, இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு தத்தெடுக்க விரும்புவர்கள் ABM-ன் தலைமை செயலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நன்கொடை, மற்றும் காசோலைகளைக் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கிற்கு அனுப்பி எங்களுக்குத் தகவல் தரலாம்.

abm building adirai

ADIRAI BAITHULMAL, A/c No.
Indian Bank : 560 567 583
Canara Bank : 120 110 102 3472
Dhanlaxmi Bank : 115 53 332


ADIRAI BAITHULMAL
23/1, MIDDLE STREET
ADIRAMPATTINAM – 614701
TANJORE DISTRICT
TAMIL NADU, S. INDIA

Telephone : 
Office 
: 04373 241690
President 
: 98425 20199
Secretary 
: 99521 20166