1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer
Monday, 30 September 2013 08:27

28/09/2013 அன்று அதிரை பைத்துல் மால் அபுதாபி கிளையின் நிர்வாகிகள் முதல் அமர்வு (கூட்டம்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

28/09/2013 மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் அபுதாபி கிளையின் பொருளாளர் எஸ்.முஹைதீன் அப்துல் காதிர் அவர்கள் இல்லத்தில் இந்த அமர்வு நிகழ்த்தப்பட்டது:

கலந்து கொண்ட நிர்வாகிகள்:

எஸ். அபுல்கலாம் (தலைவர்)
என். அப்துல் மாலிக் (துணைத் தலைவர்)
எஸ். முஹைதீன் அப்துல் காதிர் (பொருளாளர்)
ஏ.கே. ஃபைஸல் அஹ்மத் (செயலாளர்- அபுதாபி)
எம்.யூ.அப்துல் ஜலீல் ( செயலாளர்- முஸஃபா)

சகோதரர்கள் ஷுஐப் மற்றும் ஷம்ஷுல் ஹக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கிரா அத் = செல்வன். முஹம்மத் இப்றாஹிம் ( எஸ். முஹைதீன் அப்துல் காதிர் அவர்களின் புதல்வர்)

1) கூட்டு குர்பானியின் அவசியம் பற்றியும், அதற்கான தொகையை நிர்வாகிகளும் செலுத்திட வேண்டும் மற்றும் குடும்பத்தார்களிடமும் இச்செய்தியை அறிவித்து அவர்களும் உறவினர்களும் அதிரை பைத்துல் மால் அலுவலகத்திற்கு அத்தொகையை உடன் அனுப்பிடச் செய்ய வேண்டும் என்றும் சகோ. எஸ். அபுல்கலாம் அவர்கள் உரையாற்றினார்கள்.

2) அமீரகத்தில் “வட்டியில்லாக் கடன்” திட்டம் உருவாக்குதலின் அவசியம் பற்றியும்; அதன் உருவாக்கத்தில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள், செயல்முறைகள் பற்றியும் சகோ. என். அப்துல் மாலிக் அவர்கள் உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:

1) குர்பானி பிராணிகளை அறுக்கும் கூலியும், அறுப்பதற்கான ஆட்களும் அதிரை பைத்துல்மால் தலைமையகம் ஏற்பாடுகள் செய்தல் நலம் என்று கருதப்பட்டு , இச்செய்தியைத் தலைமையகத்துக்குத் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனால் ஏற்படும் கூலி செலவுகளும் நிர்ணயிக்கப்பட்டத் தொகையுடன் சேர்க்கலாம் என்றும் கருத்துரைச் சொல்லப்பட்டது.


2) அமீரகத்தில் வட்டியில்லாக் கடன் அமல்படுத்துவதில் சிரமமின்றி விரைவாகவும் வெற்றிகரமாகவும் அமைத்திட “அதிரை அனைத்து மஹல்லாக் கூட்டமைப்பு” அமீரகக் கிளைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களைச் சந்திக்க வேண்டும். அதற்கான முன்வரைவுகள் மற்றும் ஆலோசனைகள் பெற வேண்டி, அமீரக அதிரை பைத்துல் மால் துபை மற்றும் அபுதாபி கிளைகளின் நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டும் என்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

3) அதிரையில் “இஸ்லாமிய வங்கி” ஒன்று துவங்கிட அதிரை பைத்துல் மால் தலைமையகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


4) மேற்காணும் தீர்மானங்களை அதிரை பைத்துல்மால் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்து, அவர்களின் மேற்பார்வைக்குப் பின்னர் தான் அதிரை வலைத்தளங்களில் அவர்கள் வழியாக/ தலைமையகத்தின் கையொப்பத்துடன் வெளீயிடுதல் வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ், அடுத்த அமர்வு நவம்பர் இரண்டாம் வாரம் (வெள்ளிக்கிழமை) 09/11/2013 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


அதிரை பைத்துல்மால்

No.23/1,நடுத்தெரு
அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம்

போன் : (+91) 04373 241690
ஈமெயில் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. , This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.