1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer

சேவைகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்விற்கே
அதிரை பைத்துல்மால், மக்களின் துயர் துடைப்புப்பணியில் 1993ம் ஆண்டு முதல் அரும்பணியாற்றிவருவது அனைவரும் அறிந்த ஒன்று வட்டியிலிருந்து மக்களை மீட்டுடெடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு தொடங்கப்பட்டு அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி

  1. வட்டியில்லா நகைக்கடன் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
  2. வறுமையில் வாடும் விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தின் மூலம் 120 நபர்களுக்கு ரூ 300 விதம் ஜக்காத் நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  3. ஏழை, எளிய மாணவ / மாணவிகளுக்கு ஜாதி, சமய வேறுபாடின்றி பள்ளிக்கல்வி கட்டணம் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது.
  4. ஏழைக்குமர்களுக்கு இலவசத் திருமணம் மற்றும் திருமண உதவி.
  5. ஏழை சிறார்களுக்கு இலவச கத்னா (சுன்னத்) செய்வித்தல்.
  6. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்புப்பணியில் பங்கெடுத்து அவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்.
  7. (குறிப்பு : 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிரை பைத்துல்மாலின் பங்களிப்பு தமிழகம் அறிந்த ஒன்றாகும்.)
  8. அனைவர்க்கும் உயர் கல்வித்திட்டம் (ஏழை மாணவ/மாணவிகளை தத்தெடுத்து உயர்க்கல்வி அளித்தல்.)
  9. ஆம்புலன்ஸ் சேவை.
  10. ஜக்காத் நிதி வசூல் மற்றும் விநியோகம்.
  11. ஃபித்ரா அரிசி விநியோகித்தல்.
  12. குர்பானித் திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு குர்பானி இறைச்சி வழங்குதல்.
  13. போன்ற நற்பணிகளில் அதிரை பைத்துல்மால் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி சேவை செய்து வருகிறது. இவ்வனைத்துப்பணிகளும் பல நல்லுள்ளங்கள் தரும் ஜக்காத் நிதிலிருந்தும், நன்கொடைகள் மற்றும் குர்பானித்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் முதலியவற்றைக்கொண்டும் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே மேற்கண்ட நற்பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற உங்களின் ஜக்காத் நிதிகளையும் நன்கொடைகளையும் அதிரை பைத்துல்மால் நிறுவனத்திற்கே வழங்கி நல்லாதரவு தர வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றியை தருவானாக ஆமீன்.