1. Skip to Menu
 2. Skip to Content
 3. Skip to Footer

அதிரை பைத்துல்மாலின் 12 ஆண்டு சேவைகள்

 அதிரை பைத்துல்மால் இதுவரை ஆற்றியுள்ள சேவைகள் ஏராளம். அவற்றை ஒரு கண்ணோட்டம் இடுவது சாலச்சிறந்தது. தன்கென இதுவரை (மார்ச் 2005) நிரந்தர சொந்த வருமானம் ஏதுமின்றி சந்தா தொகையையும், நன்கொடையாலும், ஜக்காத், ஃபித்ரா போன்றவற்றையும் மட்டுமே வைத்து இந்தப்பணிகள் சேவைகளாக மலர்ந்துள்ளன. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!.

 • ஏழைச் சிறுவர் ஹத்னா திட்டத்தின் மூலம் 147 பேர்களுக்கு ஹத்னா என்னும் சுன்னத் செய்விக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு முட்டை, அரிசி, உலுந்து மற்றும் மாத்திரை மருந்துகள், வழிச்செலவு பணம் யாவும் கூடவே வழங்கப்பட்டது.

  ஏழைக்குமர் திருமணத் திட்டத்தின் மூலம் 140 பேர்களுக்கு திருமண உதவியாக ஒவ்வொருவருக்கும் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை உதவிகள் செய்யப்பட்டது. அவர்களில் சில மணமக்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆசிகா ஜுவல்லர்ஸ் ஹாஜி ஜெகபர் சாதிக் அவர்கள் மூலம் 10 திருமணங்கள் நடத்தி வழங்கப்பட்டுள்ளன.
 • 668 பேர்களுக்கு வட்டியில்லாக்கடனாக ரூ 18,91,700 வழங்கப்பட்டு உள்ளது.

  வருடாவருடம் வழங்கப்படும் ஜக்காத் நிதி 206 பேர்களுக்கு ரூ 6,29,809 இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் ஒரு பகுதி ரூ. 200, ரூ 250, ரூ 300 வீதம் மாத மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் (2005) 31 நபர்களுக்கு தலா ரூ 200 வீதம் மாத மானியமாக வழங்கப்பட்டு வருகிறது
 • பித்ரா வசூல் செய்து வருடந்தோறும் 22 தெருக்களுக்கு, இதுவரை மொத்தம் 932 அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. சில போது, புது ஆடைகளும் ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளன.
 • குர்பானித்தோல்களை வசூல் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பல மக்கள் சேவைக்கு பயன்படுகிறது. கூட்டுக் குர்பானித்திட்டம் செயல்படுத்தி வருவதோடு குர்பானி இறைச்சியையும் ஏழைகளுக்கு பங்கீடு செய்து வருகிறது.
 • சுய தொழில் துவங்கிட 10 பேர்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டுள்ளன. வெட்கிரைண்டைர்கள் 5 பேர்களுக்கும், சைக்கிள் ரிக்ஷா 15 பேர்களுக்கும், சிறு தொழில்கள் (மீன், கருவாடு, மீன்பிடி நூல், தூண்டி முள், இட்லி போன்ற வியாபாரங்கள்) துவங்க 20 பேர்களுக்கும் ரொக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
 • கடந்த 4 வருடங்களாக 24 மணிநேர ஆம்புலம்ஸ் சேவை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தச்சேவை மதங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சேவை காலத்தின் தேவை, மிக முக்கியமானப் பணியாக கணிக்கப்படுகிறது.

  பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு பள்ளிச்சீருடை, படிப்புக்கட்டணங்கள், நோட்புக்ஸ் யாவும் 1100 மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 • கடந்த 9 ஆண்டுகளாக திருக்குர் ஆன் மாநாடு நடத்தி சமூகத்தில் குறிப்பாக பெண்கள், பாலர் பருவத்தினர் மத்தியில் இஸ்லாமிய - சமூக நல்லிணக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பிற சகோதரர்களையும் வரவேற்று நடத்தப்படுகின்ற சமூக நல்லிணக்க மாநாட்டுக்கூட்டம் ஒற்றுமைக்கும் பரஸ்பர புரிந்துணர்தலுக்கும் வழிவகுத்துள்ளது. இதற்கு முன்னதாக, வரதட்சணை ஒழிப்பு மாநாடு சமூக பட்டிமன்றம் யாவும் நடத்தியுள்ளது.
 • அரசு சார்ந்த சமூக நலத்திட்டங்களான போலியோ சொட்டு மருந்து திட்டம், யானைக்கால் தடுப்புத்திட்டம் இலவச கண் மருத்துவ முகாம் போன்றவற்றில் பங்கு கொண்டு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை ஆற்றியுள்ளது.
 • ரேஷன் அட்டை புகைப்படம் எடுக்கும் திட்டத்தில் திறம்படச் செயல்பட்டு மக்களின் பாராட்டைப்பெற்றது.
 • வருடந்தோறும் புனித ரமளான் இரவுகளில் பெண்களுக்கு தராவிஹ் தொழுகையுடன் சிறப்பு பயான்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இத்துடன் பெருநாள் தொழுகையையும் நடத்தி வருகிறது.
 • கடந்த 3 வருடங்களாக, ஊரில் நடக்கும் ஹந்தூரிகளில்( கடற்கரைத்தெரு) விழாக்களாக இருந்ததை பயான்களாக மாற்றி அவற்றுக்கு ஏற்பாடும் செய்து நடத்தி வருகிறது. சமூக சிந்தனையாளர்களால் இப்பணி மிகவும் போற்றப்பட்டு வருகிறது.
 • அநாதை மய்யித்துக்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் திறம்படச் சேவை ஆற்றியுள்ளது. இதுவரை 8 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ளது.
 • தனிநபர் செய்த நேர்ச்சைகளை, சாப்பாடுகளை தாமே சமைத்தும் ஏழை எளியவர்களுக்கு பங்கீடு செய்துள்ளது. வீடுகளில் நடக்கும் விழாக்காலங்களில் எஞ்சியவற்றையும் பெற்று தேவையுடையோர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. இச்சேவையை அறிந்து பக்கத்து ஊர்க்காரர்களும் அங்கே எஞ்சிய சாப்பாடுகளை பகிர்ந்தளிக்க அதிரை பைத்துல்மால் உதவியை நாடுகின்றனர்.
 • ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உர்தூ பேச்சுக்கலை, பெண்களுக்கு தையல் வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
 • கடந்த 9 வருடங்களாக திருக்குர்ஆன் மாநாடு நடத்தி சமூகத்தில் குறிப்பாக பெண்கள், பாலர் பருவத்தினர் மத்தியில் இஸ்லாமிய - சமூக நல்லிணக்க விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பிற சகோதரர்களையும் வரவேற்று நடத்தப்படுகின்ற சமூக நல்லிணக்க மாநாட்டுக் கூட்டம், ஒற்றுமைக்கும் பரஸ்பர புரிந்துணர்தலுக்கும் வழிவகுத்துள்ளது. இதற்கு முன்னதாக, வரதட்சணை ஒழிப்பு மாநாடு சமூக பட்டிமன்றம் யாவும் நடத்தியுள்ளது.
 • அரசு சார்ந்த சமூக நலத்திட்டங்களான போலியோ சொட்டு மருந்து திட்டம், யானைக்கால் தடுப்புத்திட்டம், இலவச கண் மருத்துவ முகாம் போன்றவற்றில் பங்கு கொண்டு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை ஆற்றியுள்ளது.
 • ரேசன் அட்டை புகைப்படம் எடுக்கும் திட்டத்தில் திறம்படச் செயல்பட்டு மக்களின் பாராட்டைப்பெற்றது.
 • வருடந்தோறும் புனித ரமளான் இரவுகளில் பெண்களுக்கு தராவீஹ் தொழுகையுடன் சிறப்பு பயான்கள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இத்துடன் பெருநாள் தொழுகையையும் நடத்தி வருகிறது.
 • கடந்த 3 வருடங்களாக, ஊரில் நடக்கும் ஹந்தூரிகளில் (கடற்கரைத்தெரு) விழாக்களாக இருந்ததை பயான்களாக மாற்றி அவற்றுக்கு ஏற்பாடும் செய்து நடத்தி வருகிறது. சமூக சிந்தனையாளர்களால் இப்பணி மிகவும் போற்றப்பட்டு வருகிறது.

  அனாதை மய்யித்துக்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் திறம்படச் சேவை ஆற்றியுள்ளது. இதுவரை 8 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துள்ளது.
 • தனிநபர் செய்த நேர்ச்சைகளை, சாப்பாடுகளை தாமே சமைத்தும் ஏழை எளியவர்களுக்கு பங்கீடு செய்துள்ளது. வீடுகளில் நடக்கும் விழாக்காலங்களில் எஞ்சியவற்றையும் பெற்று தேவையுடையோர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. இச்சேவையை அறிந்து பக்கத்து ஊர்க்காரர்களும் அங்கே எஞ்சிய சாப்பாடுகளை பகிர்ந்தளிக்க அதிரை பைத்துல்மால் உதவியை நாடுகின்றனர்.
 • ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உர்து பேச்சுக்கலை, பெண்களுக்கு தையல் வகுப்புகள் இலவசமாக அளிக்கப்பட்டது.
 • துரித சேவையாக திடீரென தீ விபத்தில் மாட்டிக்கொண்ட MSM நகர், கடற்கரைத்தெரு, பட்டுக்கோட்டை வடசேரி காலணி குடும்பங்களுக்கு ஆதரவளித்து சகல உதவியும் ரொக்கத்தொகையும் வழங்கியுள்ளது.
 • குஜராத், ஒரிசா துயர நிவாரண நிதிகளைத்திரட்டி அனுப்பி துயர் துடைப்பு பணியாற்றியது.
 • கார்கில் போரில் உயிர் நீத்த பள்ளிகொண்டானைச் சேர்ந்த திரு சக்திவேல் குடும்பத்திற்கு பணமுடிப்பு ரூ7000/- வழங்கப்பட்டது.
 • வருடந்தோறும், முஹல்லாதோறும் மார்க்க சேவையாற்றிய ஆலிம் பெருமக்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது.
 • நமதூரில் துணை மின்நிலையம் அமைவதற்கு ஊர் முழுவதும் வீடுவீடாக சந்தா வசூல் செய்து நிலம் வாங்கிட பாடுபட்டது.
 • முஹல்லா தோறும் ஆரம்ப குர் ஆன் மதரஸா துவங்கி நடத்துவது என்ற நோக்கத்தோடு தற்போது 3 முஹல்லாக்களில் இந்த சேவை கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
 • கல்வி ஆலோசனைகள் உரியவர்களைக் கொண்டு வழங்கப்படுவதுடன் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு பல உதவிகள் செய்து வந்துள்ளது.
  எஸ்ஸர்னல் குர் ஆன் மற்றும் 30 ஜுஸ்வு குர் ஆனை ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகிறது.
 • உபயோகப்படுத்த தகுதியான பழைய ஆடைகளை வசூலித்து ஏழைகளுக்கு பகிர்ந்தளித்துள்ளது.
 • அவசர மருத்துவ உதவிகள் பல ஆற்றியுள்ளதுடன் இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தியுள்ளது.
 • குர்பானித் தோல் வசூலித்து அதிலிருந்து ஈட்டப்படும் தொகையை மருத்துவ உதவிகளாகவும் மற்ற சமூக பணிகளிலும் செலவு செய்து வருகிறது.
 • நேர்ச்சை இறைச்சி மற்றும் உணவுகளைப் பெற்று ஏழை எளியோர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது.
 • இலவச வெட்கிரைண்டர், தையல் மிஷின்கள், இட்லி சட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
 • ஊர் தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து சேவை செய்து வருகிறது.ஆவணத்தில் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி உதவி செய்துள்ளது.
 • பாபநாசத்தைச் சேர்ந்த ஊனமுற்ற நபருக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் M. இராசாராம் IAS அவர்களது பரிந்துரையின் பேரில் மூன்று சக்கர வண்டிக்கு மோட்டார் வாங்க ரூ. 3000 வழ்ங்கியுள்ளது.
 • ஏரிபுறக்கரை மீனவக் குடும்பத்தைச் சார்ந்த ஏழை கேன்சர் நோயாளிக்கு ரூ 2000 வழங்கியுள்ளது.
 • 2004 டிசம்பர் 26-ம் நாள் நிகழ்ந்த சுனாமி இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 1,55,000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
 • ஏழைக்குஅர் திருமண திட்டத்தின் கீழ் 03-03-2005 அன்று ரூ. 35,000 செலவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இத்திருமணத்தின் போது பெண்ணுக்கு 44 கிராம் மதிப்புள்ள தங்க நகை அதிரை பைத்துல்மால் மூலம் வழங்கப்பட்டது.
 • அதிரை பைத்துல்மால் 10வது திருக்குர் ஆன் மாநாட்டில் 2 ஏழைக்குமர் திருமண ஜோடிகளுக்கு தலா ரூ 25,000 செலவில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
 • இதுபோன்ற எண்ணற்ற சேவையாற்றி வரும் அதிரை பைத்துல்மால் மென்மேலும் சமூக பணியில் நிலைத்து நிற்கவும் தூய எண்ணத்துடன் பணியாற்றிடவும் தாங்கள் துஆ செய்யும்படி வேண்டுவதுடன் உங்களது மேலான ஆலோசனைகளையும், ஆதரவையும் பெறுவதற்கு காத்திருக்கிறது.