1. Skip to Menu
  2. Skip to Content
  3. Skip to Footer

வட்டியில்லாக் கடன்

வட்டி ஒரு ஹராம். இறைவனால் விலக்கப்பட்ட ஒரு செயல். இது ஒரு சமுதாயக் கொடுமை. பொருளதார வளர்ச்சியை தடுக்கும், பொருளாதாரத்தை அழிக்கும் நாச சக்தி. உழ்ப்பின் பலனைப் பெறமுடியால் விரக்தி அடையும் வட்டி ஒரு காரணமாக இருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கையை வாழவும், தனது வசதி,வாய்ப்பு, வருமானத்திற்கு அதிகமான அளவிற்கு ஆசைகளை வளர்த்துகொண்டு வட்டிப்பணம் வாங்குபவர்களுக்கு வட்டில்லாக்கடன் தராமல், தொழில் முனைவோருக்கும், வெளினாடு செல்ல இருப்பவருக்கும், மருத்துவம், கல்வி செலவினங்களுக்கும், அவசர தவைகளுக்கும் கடன் தருவது நலம். தற்போது வழங்கப்படும் ரூ.5000 தோவைக்குப் போதாது. குறைந்தது ரூ.25,000 வரையாவது வழங்கினால் மிகவும் உதவியாய் இருக்கும்.

அதிரை பைத்துல்மாலிடம் நிரந்தர வருமானம் இல்லை. வைப்பு நிதி ஏதும் இல்லை. உறுப்பினராகச் சேர்ந்து ரூ.1000 அல்லது ரூ.500 என உறுப்பினர் தொகையாகச் செலுத்துபவர் எண்ணிக்கையும் அதிகமாக இல்லை.

அதிரை பைத்துல்மாலின் ஆரம்ப காலத்தில் நபர் ஜாமின்/பொறுப்பு பேரில் கடன் கொடுத்தோம். நம்பிக்கை தான் மூலதனம். ஆனால் எங்களது எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. இருப்பினும் மனந்தரளாமல் கடனை வசூலிக்க முயற்சி நடக்கிறது. கடன் உதவியும் தொடர்கிறது. சில சகோதரர்களின் நல்லெண்ணத்தால், ஆதரவினால் கடன் உதவி செய்யப்படுகிறது.

வட்டியில்லாக்கடன் உதவியை எப்படி வழங்குவது அன்பு சகோதரர்களோ இதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன.

1. உறுப்பினர்களாகச் சேருவது. தங்களது குடும்பத்தார் அனைவரையும் உறுப்பினர்களாக்கி உறுப்பினர் தொகையை வழங்குவது.

2. இறந்து போனவர்களின் பெயராலும், நன்மையை நாடி அவர்களது பெயரில் உறுப்பினர் தொகையை வழங்குவது.

3. சதகாவாக வட்டியில்லாக்கடனுக்கு உதவி வழங்குவது.

4. வங்கியில் அல்லது தனிப்பிட்ட முறையில் உபரியாக உள்ள பணத்தை ஒரு வருட காலத்திற்கு அதிரை பைத்துல்மால் கடனாக வழங்குவது. கடன் தொகைக்கு ஈடாக கடன் பத்திரம் வழங்கப்படும். அதிரை பைத்துல்மாலின் நடுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு கட்டடங்கள் ஈடாகக் காட்டப்படும். பணத்திற்கு நிர்வாகிகளும் பொறுப்பேற்பார்கள்.

குறிப்பு : வட்டியில்லாக்கடன் மூலம் நல்ல நன்மையை, சிறந்த மக்கள் சேவையை செய்ய முடியும். ஒவ்வொரு வருடமும் நமதூர் சகோதரர்கள் மனமுவந்து ரூ.1000-யை நன்கொடையாக வழங்கினால் ஓரளவிற்கு நிதியை திரட்டிட முடியும்.